அதிரடி! வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!!

அதிரடி! வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!!

Update: 2022-02-18 10:03 GMT

வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி நாட்களாக இருக்கும் என்பதற்கான சட்ட வரைவை பெல்ஜியம் அரசு கொண்டு வந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிறகு தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பிரதமர் அலெக்சாண்டர் டீ க்ரூ தெரிவித்துள்ளார்.

அதன்படி வாரத்தில் 4 நாட்களில் 38 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு இந்த ஆண்டு மத்தியில் அமலுக்கு வரும் என தெரிகிறது. ஏற்கனவே ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் நான்கு நாட்கள் மட்டுமே பணி என்பதை பரிசோதனை செய்துள்ளன.

முன்னதாக வாரம் நான்கு நாட்கள் வேலை இந்தியாவிலும் வரும் என மத்திய அரசு அறிவித்தது. வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்பதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அது அப்படியே தொடர்கிறது.

ஆனால் வேலை  நேரத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதன்படி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை என்றால் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்அதுவே 10 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 5 நாட்களும், 8 மணி நேரம் வேலை என்றால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்யவேண்டி இருக்கும்.

இதில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் எந்தவித நிர்பந்தமும் இல்லை. மாறி வரும் பணி தொடர்பான கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என மத்திய அரசு கூறியிருந்தது.

newstm.in

Similar News