அதிரடி ஆஃபர்! பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம்!!

அதிரடி ஆஃபர்! பிரியாணி வாங்கினால் பெட்ரோல் இலவசம்!!

Update: 2022-04-11 07:00 GMT

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110 கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலையும் ரூ.100 கடந்துவிட்டது. அதே போல் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

சுங்க கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என தொப்பி வாப்பா பிரியாணி கடை விளம்பரம் செய்துள்ளது. நாளை (12.04.22) மட்டும் இந்த சிறப்பு சலுகை இருக்கும் என்றும், முதல் 50 நபர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும் என்றும் தொப்பி வாப்பா பிரியாணி கடை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தங்களின் அனைத்து கிளை கடைகளிலும் இந்த ஆபர் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொப்பி வாப்பா பிரியாணி கடை தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்திலும் விளம்பரம் செய்துள்ளது.

newstm.in

Similar News