நாளை முதல் அதிரடி மாற்றம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

நாளை முதல் அதிரடி மாற்றம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Update: 2022-06-30 12:45 GMT

இன்றைய காலகட்டத்தில் ‘கேஷ் லெஸ்’ அதாவது பணமில்லா பரிவர்த்தனையின் போக்கு அதிகமாகிவிட்டது. இந்த முறையிலும் எளிதாகவும் விரைவாகவும் பணம் செலுத்தலாம்.

ரொக்கமில்லாமல் பணம் செலுத்துவதற்கான ஒரு வழிமுறை கிரெடிட் கார்டு பயன்பாடாகும். கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்வதில் பல நன்மைகள் உள்ளன. இந்நிலையில், வரும் 1-ம் தேதி முதல் கிரெடிட் தொடர்பான சில விதிகள் மாற்றப்பட உள்ளன.

அதன்படி,  நிறுவனம் மூலம் கிரெடிட் கார்டின் தவறான பில் வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பில் மற்றும் ஸ்டேட்மென்ட்களை உருவாக்கவோ, அனுப்பவோ அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பவோ தாமதம் இல்லாமல் இருப்பதை கார்டு வழங்குபவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், அட்டைதாரர்களுக்கு, வட்டி கட்டாமல் பில்லை கட்டும் அளவு போதிய நேரமும் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களின்படி, கார்டு வழங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதி செய்ய ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஒருவேளை கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கார்டை மூடுவதற்கு விண்ணப்பித்தால் கிரெடிட் கார்டு வழங்குபவர் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி ஏழு வேலை நாட்களுக்குள் அந்த கார்டை மூட வேண்டும்.

அதன்பிறகு மூடப்பட்ட கார்டுதாரர்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அவற்றின் மூலம் உடனடியாக மூடப்பட்டது தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளை ஏழு நாட்களுக்குள் கிரெடிட் கார்டு வழங்க கூடிய நிறுவனங்கள் கார்டை மூடவில்லை என்றால் அதன் பிறகு நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்.

இதில் முக்கியமான நிபந்தனை என்னவென்றால், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் கணக்கில் பற்று எதுவும் இருக்கக் கூடாது. வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அந்நிறுவனம் கிரெடிட் கார்டு வழங்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் கிரெடிட் கார்டு வழங்கி அதற்கு பில் செய்தால் அந்த நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த வேண்டும்.

இந்த புதிய விதிமுறைகளின்படி பில்லிங் சைக்கிளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஜூலை 1-ம் தேதி முதல் கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சி முந்தைய மாதம் 11-ம் தேதி தொடங்கி நடப்பு மாதம் 10-ம் தேதி வரை இயங்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Similar News