முறைகேட்டை தடுக்க நடவடிக்கை.. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு !

முறைகேட்டை தடுக்க நடவடிக்கை.. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு !

Update: 2022-02-21 19:45 GMT

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசிடம், மின்வாரியம் ஒப்புதல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், சுமார் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முறையும் தொடர்கிறது. இலவச மின்சாரத்திற்காக ஆண்டிற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை, மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்குகிறது.

இந்த திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று மின் இணைப்புகள் மூலம் மானியம் பெற்று பயனடைவதாக மின்வாரியத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதனை தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் முறைகேடுகளை கண்டறிய முடியும் என மின்வாரியம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னெடுப்புகளைவும் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மின்வாரிய அதிகாரிகள் ஏற்கனவே ஆலோசனை நடத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும், அதன்பின்னர் அறிவிப்பு வெளிவரும் எனவும் என தகவல் வெளியாகியுள்ளது.


 
newstm.in

Similar News