அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை.. ஆவடி ஆணையர் அதிரடி உத்தரவு..!
அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை.. ஆவடி ஆணையர் அதிரடி உத்தரவு..!
‘அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. மேலும், அலுவலக பணி நேரத்தின்போது செல்போன் பேசுவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
ஏதாவது அவசர காரணம் என்றால் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும்’ என்று, தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், “போலீசார் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என, ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், “பணி நேரத்தில் போலீசார், அமைச்சுப் பணியாளர்கள் செல்போன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் போலீசார் மீது அரசு ஊழியர் நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.