சிபிசிஐடி அதிகாரி முன் நடிகர் சூரி ஆஜர்!!
சிபிசிஐடி அதிகாரி முன் நடிகர் சூரி ஆஜர்!!
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீதான வழக்கில், நடிகர் சூரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.
சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உயர் பதவியில் இருப்பவர்கள் இதுபோன்ற பண மோசடி செயல்களில் ஈடுபடக்கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
வழக்கின் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும், துணை ஆணையர் பொறுப்பில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் எனவும் , கூடுதல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்திருந்தார்.
அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது புதிதாக விசாரணை நடத்தி, அதை 6 மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கிற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவின் துணை ஆணையர் மீனா முன்னிலையில் விசாரணைக்காக, நடிகர் சூரி ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, நேரில் ஆஜராகி அனைத்து பதில்களும் தெரிவித்துள்ளேன். தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று கூறினார்.
newstm.in