தெலங்கானா முதலமைச்சருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!!
தெலங்கானா முதலமைச்சருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!!
தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவை நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.
விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் 'விஜய் 66’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கின் முன்னணி இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கிய ‘விஜய் 66’ படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்வை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
சந்திரசேகர் ராவுக்கு விஜய் மலர்கொத்தும் பதிலுக்கு சந்திரசேகர் ராவ் நினைவுப்பரிசும் வழங்கி கெளரவித்துக்கொண்டனர். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
newstm.in