நாட்டுக்காக உயிரைவிட்ட நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்..!
நாட்டுக்காக உயிரைவிட்ட நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்..!
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் மக்களை பாதுகாக்கும் விதமாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 33 வயதான நடிகர் பாஷா லீ என்பவர் ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ராணுவ வீரர்களால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடைசி பதிவில், “கடந்த 48 மணி நேரத்தில் எங்கள் நாட்டில் எப்படி குண்டு வெடிக்கிறது என்பதை அமைதியாக உட்கார்ந்து புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாங்கள் சிரிப்பதற்கு, எங்களால் அதை சமாளிக்க முடியும் என்பதே காரணம். உக்ரைன் மக்களே, நாங்கள் இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இப்படி பதிவிட்டு அடுத்த நாளே ரஷ்ய ராணுவத்தினரால் கொல்லப்பட்டது மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.