நடிகை ஆணவக்கொலை வழக்கு- ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சகோதரன் திடீர் விடுதலை !!

நடிகை ஆணவக்கொலை வழக்கு- ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சகோதரன் திடீர் விடுதலை !!

Update: 2022-02-15 18:13 GMT

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது பிரபல மாடல் அழகியும் நடிகையுமான கந்தீல் பலூச் ஆணவக் கொலை. ஆணாதிக்க கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த இவர், தனது சமூக ஊடக பதிவுகள் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நாட்டில், பெண்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள முடியாத தேசத்தில் கந்தீல் பலூச் தனது பாலுணர்வூட்டப்பட்ட பெண் வடிவத்தை பொதுவெளியில் பகிர்கிறார்.அவரது காணொளிகள் பரபரப்பாக பார்க்கப்படுகின்றன. இதனால் நடிகை கந்தீல் பலூச்-க்கு பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கும் மேலாக அவரது வீட்டில் சகோதரர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். 

எனினும் நடிகை தொடர்ந்து கருத்து கூறி வந்ததால், கடந்த 2016ஆம் ஆண்டில் அவரது சகோதரரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். தனது சகோதரியின் நடத்தை "சகிக்க முடியாதது" என்பதால் இந்த ஆணவக் கொலை குறித்து தனக்கு வருத்தம் இல்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த கொலை தொடர்பாக கந்தீல் பலூச்சின் சகோதரர் முகமது வசீம் கைது செய்யப்பட்டு பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நீதிமன்றத்தால் அவர் முழுவதுமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அவரது வழக்கறிஞர் சர்தார் மெஹ்பூப் கூறினார். அவரின் விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.
 


கந்தீல் பலூச்சின் வழக்கில், அவரது பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு மன்னிப்பு வழங்க மாட்டோம் என்று ஆரம்பத்தில் வலியுறுத்தினர். ஆனால் பின்னர் அவர்கள் மனம் மாறி அவரை மன்னிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் கந்தீல் பலூச்சின் சகோதரரை மன்னிக்க அவரின் தாய் சம்மத கடிதம் அளித்ததாக அவரது வழக்கறிஞர் சப்தர் ஷா தெரிவித்தார். இந்த வார இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது


newstm.in

Tags:    

Similar News