நடிகை மரணம்… கடைசி புகைப்படத்தை பகிர்ந்து பிரபல நடிகர் உருக்கம்!!

நடிகை மரணம்… கடைசி புகைப்படத்தை பகிர்ந்து பிரபல நடிகர் உருக்கம்!!

Update: 2022-05-17 07:56 GMT

நடிகை சஹானா உயிரிழந்த நிலையில் அவருடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்து பிரபல நடிகர் ஒருவர் உருக்கமாக தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகையான சஹானா கடந்த 12ஆம் தேதி மர்மமான முறையில் கோழிக்கோடில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் தெரிவித்தார்.

அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல மலையாள நடிகரான முன்னா சைமன்,  அவருடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், நீங்கள் எங்களை விட்டு சென்றதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் உண்மையான நம்பிக்கைக்குரிய நடிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடன் நடித்தது அருமையான நினைவுகள் டியர். உங்களை இழந்துவிட்டேன் என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், இதுதான் நாம் ஒன்றாக இருக்கும் கடைசிப் படமாக இருக்கும் என்று ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. உண்மை விரைவில் வெளிவர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், சஹானாவின் மரணம் உண்மையிலேயே பெரும் அதிர்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டு வருகின்றனர். சஹானாவின் மரணம் தொடர்பாக அவரது கணவரை கஸ்டடியில் எடுத்துள்ள போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News