பிரபல இசையமைப்பாளர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!!

பிரபல இசையமைப்பாளர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!!

Update: 2022-02-22 09:38 GMT

நடிகை கல்யாணி தனக்கு சிறு வயதில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் குறித்து அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்த கல்யாணி, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'ஜெயம்' படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்து புகழ்பெற்றவர்.

அதன் பின்னர் சின்னத்திரை பக்கம் சென்ற கல்யாணி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மெண்டராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய சிறுவயதில் நேர்ந்த கொடுமைகளை பகிர்ந்திருக்கிறார்.

அதில், தனது எட்டு வயதில், இப்போது உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராக இருக்கும் ஒருவர் தனது குடும்ப நண்பர் என்றும், அவர் தூங்கும் போது தேவை இல்லாத இடங்களில் தொடுவார் என கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

அப்போது ஒருத்தர் நம்மை தொடும் போது நமக்கு ஒரு மாதிரியாக இருக்கும். நான் விழித்து விடுவேன். இருந்தாலும் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன். அவர் தேவையில்லாமல் கைகளை என் மீது வைப்பார் என கூறியுள்ளார்.

இதை நான் எங்கேயுமே சொன்னது இல்லை. என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன். டிவியில் அவருடைய நிகழ்ச்சி பார்க்கும் போது எனக்கு அந்த ஞாபகங்கள் தான் வந்தது.

அப்போது தான் என்னுடைய கணவரிடம் நான் சொன்னேன். அவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு சமாதானம் சொன்னார். இப்போது நினைத்தால் கூட அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார்.

இந்த மாதிரி பல பாலியல் தொல்லையால் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன். தற்கொலைக்கு கூட முயன்றேன் என உருக்கமாக பேசியுள்ளார் கல்யாணி. அவரின் இந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

newstm.in

Similar News