தேர்வு எழுதும் இந்த மாணவர்களுக்கு கூடுதல் சலுகை.. அரசு அதிரடி அறிவிப்பு..!

தேர்வு எழுதும் இந்த மாணவர்களுக்கு கூடுதல் சலுகை.. அரசு அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-04-09 11:27 GMT

தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுக்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் கூடுதல் சலுகைகள் வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, 10, 11, 12-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை தேர்வில் எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் மற்றும் மொழிப்பாடத்தில் விலக்கு அளிக்கப்படும்.

10-ம் வகுப்பில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் விலக்கு கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளரை பணியமர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

மாற்றுத்திறன் தேர்வர்கள் தரை தளத்திலேயே தேர்வு எழுத வசதி. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு போன்ற சலுகைகளுக்கு கூடுதலாக அனுமதி வழங்கி தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News