ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..?: வரும் 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..?: வரும் 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

Update: 2022-02-11 18:07 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மளமளவென குறைந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. தொற்று பாதிப்பு வேகமாக குறைவது மக்களை சற்று நிம்மதி பெருமூச்சு விடச் செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிய உள்ளது. இதனால், கூடுதல் தளர்வுகள் விதிப்பது தொடர்பாக வரும் 14-ம் தேதி  முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தற்போது 1 முதல்  12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதுபோல், நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா? என பெற்றோர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை பின்பற்றி கூடுதல் தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்று தெரிகிறது.

Similar News