ரேஷன் கடைகளில் கூடுதல் சேவைகளுக்கு அனுமதி.. அசத்தல் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !!

ரேஷன் கடைகளில் கூடுதல் சேவைகளுக்கு அனுமதி.. அசத்தல் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !!

Update: 2022-02-21 18:16 GMT

ரேசன் அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ரேஷன் கடைகளில், 'இ - சேவை' மையம் துவக்கி, அதன் வாயிலாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்படும் இணைய சேவைகளை மக்களுக்கு வழங்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், இ - சேவை மையங்களை நடத்துகின்றன. இந்நிலையில், 200 கார்டுதாரர்களுக்கு குறைவாக நலிவடைந்த நிலையில் உள்ள கடைகளை, பொருளாதார ரீதியாக மேம்படுத்த கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களை விற்பது, வங்கிகள் போன்ற பண பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, வணிக ரீதியான சேவை மையங்களாக மாற்றுவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

நாடு முழுவதும் தற்போது சுமார் 3 லட்சம் பொது சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் ஆதார், பான் கார்டு, ரயில் டிக்கெட், அரசு திட்டங்கள் உட்பட ஏராளமான சேவைகளை எளிமையாக பெற முடிகிறது. அந்தவகையில் மத்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களில் பொது சேவை மையங்களில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

அதன்படி வரும் நாட்களில் 10,000 கூடுதல் பொது சேவை மையங்களை ரேஷன் கடைகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகளிலேயே பொது மக்களால் நிதிச் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். கிராமப்புற மக்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே ஆதார், பான் கார்டு, வங்கி சேவைகள், அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கான சேவைகள், பென்சன், இன்சூரன்ஸ், டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். உண்மையில் இந்த திட்டங்கள் கிடைக்கப்பெற்றால் கிராம மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என கருதப்படுகிறது.


newstm.in

Similar News