வேளாண் பட்ஜெட்: இயற்கை வேளாண்மைக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு.. முக்கிய அறிவிப்புகள் என்ன?
வேளாண் பட்ஜெட்: இயற்கை வேளாண்மைக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு.. முக்கிய அறிவிப்புகள் என்ன?
தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
அதன்படி, 2022-23 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை பார்க்கலாம்..
- வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
- இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி.
- நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட ரூ.10 கோடி நிதி.
- மானியத்தில் வேளாண் கருவி வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
- பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி ஒதுக்கீடு.
- 2020-21-ம் ஆண்டில் 9.26 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
- 2021-22-ம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி உயர்ந்துள்ளது. 4.86 ஆயிரம் ஏக்கர் முந்தைய ஆண்டை விட அதிகமாகும்.
- குறுவை சாகுபடியால் டெல்டா விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. இது 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனை.
- முதல் வேளாண்மை பட்ஜெட்டின் 86 அறிவுப்புகளுக்கு 80-க்கு அரசாணை வெளியிடப்பட்டது.
newstm.in