குருவாயூர் கோவிலில் அஜித்குமார்… ஃபோட்டோ வைரல்!!
குருவாயூர் கோவிலில் அஜித்குமார்… ஃபோட்டோ வைரல்!!
அஜித் கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அஜித், விஜய் எது செய்தாலும் அந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது வழக்கம் தான். இதில் இருதரப்பு ரசிகர்களுக்கு இடையே கடுமை வார்த்தை போரே நடக்கும். இப்போது பீஸ்ட் அப்டேட் வெளியான அதே நேரத்தில் அஜித் – விக்னேஷ் சிவன் கூட்டணி உறுதி தகவல் வெளியானது.
அதனால் இணையத்தை ஆக்கிரமித்துள்ளவர்களில் அஜித், விஜய் முன்னிலையில் உள்னனர். வலிமை படத்தை தொடர்ந்து அஜித் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படமும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படங்களில் ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் அஜித் கேரளாவில் இருக்கும் குருவாயூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
newstm.in