உடல் எடையை கடுமையாக குறைக்கும் அஜித்! அதற்காக இத்தனை கிலோவா?

உடல் எடையை கடுமையாக குறைக்கும் அஜித்! அதற்காக இத்தனை கிலோவா?

Update: 2022-03-03 10:17 GMT

AK61 படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை கடுமையாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமாரின் 'வலிமை' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியில் பல சாதனைகளை படைத்து வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம், மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.

அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே61' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியது.

மற்றொரு கதாபாத்திரத்திற்காக 25 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க அஜித் கடுமையான பயிற்சி எடுத்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், பயிற்சியாளர்கள், அஜித்தின் உடல் எடையைக் குறைக்க தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

Similar News