அஜித்தின் அடுத்தப்படம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அஜித்தின் அடுத்தப்படம்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Update: 2022-03-19 07:00 GMT

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 'AK 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை மீண்டும் ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் 62ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.


இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

திரைப்படத்தை அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

newstm.in

Similar News