அய்யய்யோ… ஏசியின் விலை உயரப்போகிறது!!

அய்யய்யோ… ஏசியின் விலை உயரப்போகிறது!!

Update: 2022-05-16 06:30 GMT

ரஷ்யா- உக்ரைன் இடையே நீடித்து வரும் போர், கொரோனா பரவல் காரணமாக சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் இந்திய சந்தைகள் தொடர்ந்து எலக்ட்ரானிக்ஸ்  மூலப்பொருட்கள் தட்டுபாட்டை சந்தித்து வருகின்றன.

அதே போல், சர்வதேச அளவில் ஏற்கனவே நிலவும் உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு, விநியோகச் சங்கிலி பாதிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஏசியின் விலையை உயர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே வேறுவழியின்றி விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். அதனால், அடுத்த மாதம் முதல் ஏசிக்களின் விலை 3 முதல் 4 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே கோடை வெயில் சுட்டெரித்து வரும் சூழலில் மக்களுக்கு ஹாட்டான செய்தியாக ஏசி விலை உயர்வு வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக விலையேற்றத்திற்கு முன்பு ஏசி வாங்கவும் பொதுமக்கள் முனைப்பு காட்டு வருவதாக தெரிகிறது.

newstm.in

Similar News