சாராயம் கடத்தும் கும்பலுக்குள் மோதல்… 5 பேருக்கு அரிவாள் வெட்டு!!

சாராயம் கடத்தும் கும்பலுக்குள் மோதல்… 5 பேருக்கு அரிவாள் வெட்டு!!

Update: 2022-04-18 08:23 GMT

நாகை அருகே சாராய வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.

கீழ்வேளூர் அருகே பெரிய கூட குடியை சேர்ந்த சாராய வியாபாரி தரணிகுமார் (27), மற்றொரு சாராய வியாபாரியான ஹரிகரன் (வயது27) ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது.

இதில் ஹரிஹரன்(27), தந்தை காளமேகம்(50) மற்றும் தம்பி ரேவந்(21) பலத்த காயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து ஹரிகரன் 10 பேர் கொண்ட கும்பலுடன் தரணிக்குமாரின் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளார்.

தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் ராஜா () முருகையன் உள்ளிட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், திருக்கண்ணங்குடி ரயில்வே கேட் அருகே நிறுத்தி இருந்த 2 இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

வெட்டு காயமடைந்த 5 நபர்களும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவ இடத்தில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

இதுதொடர்பாக ஹரிகரன்,குருபாலன், சூர்யா, சந்திரசேகரன்,வசந்த், தமிழ்மாறன், தன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.

newstm.in

Similar News