உஷார்.. 20,000- ஐ தாண்டிய தினசரி கொரோனா பதிப்பு !
உஷார்.. 20,000- ஐ தாண்டிய தினசரி கொரோனா பதிப்பு !
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 20,139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
நேற்று முன் தினம் 13,615 நேற்று 16,906 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,139 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,69,850 லிருந்து 4,36,89,989 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 16,482 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,11,874 லிருந்து 4,30,28,356 ஆக உயர்ந்துள்ளது.
Newstm.in