இன்று நாடு முழுவதும் பல மாற்றங்கள் அமல்... முழு விவரம் உள்ளே!!
இன்று நாடு முழுவதும் பல மாற்றங்கள் அமல்... முழு விவரம் உள்ளே!!
விலை உயர்வு, ஆதார் பான் இணைப்பு, சம்பளம் குறைப்பு, பிளாஸ்டிக் தடை என்று பல்வேறு விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அவை என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
இன்று முதல் நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இனி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும், வினியோகம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏசி விலை உயர்வு
ஏசிகளுக்கான ரேட்டிங் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி 5 ஸ்டார் ஏசிகள் இனி நான்கு ஸ்டார் ஏசிகளாக கருதப்படும். அதனால் ஏசி விலையை நிறுவனங்கள் 10 சதவீதம் வரை விலையை உயர்த்தக் கூடும்.
சம்பளம் குறைப்பு
இன்று முதல் புதிய ஊதிய விதிகள் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஊழியர்களின் சம்பளம் குறையும். ஆனால் பிஎஃப் பங்களிப்பு தொகை உயரும். தினமும் 12 மணி நேரம் வேலை செய்வோருக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி நேற்று என்பதால், இன்று முதல் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
டீமாட் கணக்குதாரர்களுக்கு கெடு
பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் டி மாட் கணக்குகளுக்கு செயல்முறையை முடிப்பதற்கு நேற்று கடைசி நாள். அந்த செயல்முறையை முடிக்காவிட்டால் இன்று முதல் பங்கு வர்த்தகம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் நிலைய சேமிப்பு திட்டம்
இன்று முதல் அஞ்சலகத்தில் மத்திய அரசு தனது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று முதல் வட்டி விகிதங்கள் 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளது.
வாகனங்கள் விலை உயர்வு
இன்று முதல் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவன வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. கமாடிட்டி விலை உயர்வு,பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களில் மாடலுக்கு தகுந்தாற்போல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
கிரிப்டோகரன்சி வரி
இன்று முதல் அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கும் 1% TDS வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையால் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் 1% TDS செலுத்த வேண்டும்.
டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம்
டிடிஎஸ் எனப்படும் மூல வரி பிடித்தம் தொடர்பான புதிய நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதற்காக வருமான வரி சட்டத்தின் புதிதாக ‘194- ஆர்’ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட இலவச மாதிரி மருந்துகளுக்கு மூல வரி பிடித்தம் செய்யப்படும். இலவச பயண டிக்கெட் மற்றும் சமூக ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரம் 20 ஆயிரம் ரூபாயை தாண்டும் பட்சத்தில் மூல வரி பிடித்தம் செய்யப்படும்.
newstm.in