எனக்கே பன்னீர்ரோஜாவா? - கூட்டத்தில் செம கடுப்பான எடப்பாடி பழனிசாமி !!
எனக்கே பன்னீர்ரோஜாவா? - கூட்டத்தில் செம கடுப்பான எடப்பாடி பழனிசாமி !!
அதிமுக பொதுக்குழு பல்வேறு கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், அதிமுக அவைத் தலைவராக அ.தமிழ் மகன் உசேன் பொதுக்குழு, செயற்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய, ஜெயக்குமார் வழிமொழிந்தார்.
அதிமுக அவைத் தலைவர் தேர்வு குறித்த தீர்மானத்தை வாசித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவராக அ.தமிழ்மகன் உசேன் பொதுக்குழு, செயற்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். இவர் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவரது ஆதரவாளரான முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பெஞ்சமின் பெரிய ரோஜா மாலையுடன் வந்து திடீரென எடப்பாடிக்கு மாலை அணிவித்தார்.
இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, "அட இருங்கப்பா.. சும்மா" என கோபமாக அவர்களை கடிந்துகொண்டார். இததை சற்றும் எதிர்பாராத நிர்வாகிகள் திகைத்துபோயினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு பின்னால் நின்ற கேபி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவிக்க முயன்ற திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், பொதுக்குழு ஏற்பாட்டாளருமான பெஞ்சமினை அங்கிருந்து அனுப்பினர்.
எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே மாலை அணிவித்து அவர் கடுப்பான சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல, எஸ்.பி.வேலுமணி பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் பெஞ்சமின் அதே ரோஜா மாலையுடன் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அணிவிக்க முயன்றார். அதே 'பன்னீர்' ரோஜா மாலை மீண்டும் வந்ததால் கோபமான எடப்பாடி பழனிசாமி, மாலையை பறித்து அருகே இருந்தவரிடம் கொடுத்துவிட்டு, இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கும்போது மாலை போடுவதா எனக் கோபத்தோடு கத்தினார்.
அதன்பின்னர் வந்து மலர்கொத்து கொடுத்தவர்களையும் கடிந்துகொண்டு அவர் திருப்பிஅனுப்பினார். ஆனால் அவருக்கு பொதுக்குழு சார்பில் கீரிடம் மற்றும் வாள் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்டார்.
newstm.in