தஞ்சையை சேர்ந்த விவசாயி திருவள்ளுவரின் உருவ அமைப்பில் விளைநிலத்தில் நடவு செய்துள்ளார்

விவசாயி இளங்கோவன்சின்னார் என்ற நெல் ரகத்திலும், மைசூர் மல்லி என்ற நெல் ரகத்திலும், 50 அடி நீளமும், 45 அடி அகலமும் கொண்ட திருவள்ளுவரின் உருவ அமைப்பை நடவு செய்துள்ளார்.

இவர் பத்து வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயத்தை செய்து வருகிறார். விவசாயத்தை பற்றி திருவள்ளுவர் எழுதிய குறல்களில் தாக்கத்தால் திருவள்ளுவர் உருவத்தில் விவசாயம் செய்ததாக கூறியுள்ளார் விவசாயி இளங்கோவன்.

இது பற்றி தகவல் அறிந்த அரசு தலைமை கொறடா கோவி செழியன், விவசாயிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விவசாயி இளங்கோவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த உருவ அமைப்பினை ஏற்படுத்துவதற்கு தனி ஆளாக ஐந்து நாட்கள் இந்த நடவு முறையினை செய்ததாக இவர் கூறியுள்ளார். இயற்கை விவசாயத்தை அனைவரும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை உணவுகளை அனைவரும் உண்ண வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்றும் கூறும் விவசாயி இளங்கோவன் பிற்காலத்தில் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் போன்ற முன்னோடி விவசாயிகளின் உருவ அமைப்பை நட உள்ளேன் என தெரிவித்தார்.

newstm.in