அமேசான், நெட்பிளிக்ஸ்-ஐ தொடர்ந்து ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தியது “Spotify” !!

அமேசான், நெட்பிளிக்ஸ்-ஐ தொடர்ந்து ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தியது “Spotify” !!

Update: 2022-03-27 20:05 GMT

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.

இதனால் ரஷ்யாவில் இந்த கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முடியாத நிலை ரஷ்ய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் சேவையை நிறுத்தியுள்ளது. அண்மையில், அமேசான் வர்த்தக நிறுவனம் ரஷ்யா மற்றும் பெலாரசை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சில்லறை தயாரிப்புகளை அனுப்புவதை நிறுத்தியுள்ளது. மேலும் அதன் ஸ்ட்ரீமிங் சேவையான பிரைம் வீடியோவை ரஷ்ய வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்காது என கூறியுள்ளது.

இதோடுமட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ், சாம்சங், ஆப்பிள், சோனி, கூகுள், டிஸ்னி, யூனிவர்செல், டிக்டாக், INTEL, BMW, FORD, HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

இந்த நிலையில் தற்போது ஸ்பாட்டிஃபை (Spotify ) நிறுவனமும் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளது. ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஸ்பாட்டிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது. 

ரஷ்யாவில் நம்பகமான, சுதந்திரமான செய்திகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கு எங்கள் சேவையை செயல்படுத்த முயற்சிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டம், தகவலுக்கான அணுகலை மேலும் கட்டுப்படுத்துகிறது, சுதந்திரமான வெளிப்பாட்டை நீக்குகிறது மற்றும் சில வகையான செய்திகளை குற்றமாக்குவது Spotify இன் ஊழியர்களின் பாதுகாப்பையும், ஒருவேளை கேட்பவர்களையும் கூட ஆபத்தில் ஆழ்த்துகிறது, என்று Spotify செய்தித் தொடர்பாளர் கூறினார். இதையடுத்து ரஷ்யாவில் சேவையை நிறுத்திய சமூக ஊடகங்கள் பட்டியலில் தற்போது ஸ்பாட்டிஃபையும் இணைகிறது.

பல்வேறு சமூக ஊடங்களில் ரஷ்யாவில் இருந்து விலகிய நிலையில், தனது நாட்டில் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு ரஷ்யா கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியது. யூடியூப், மெட்டா (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்) மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப தளங்கள் அனைத்தும் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தின. ரஷ்யாவின் புதிய கடுமையான சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் உட்பட பல செய்தி நிறுவனங்கள் தங்கள் பத்திரிகையாளர்களை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றின மற்றும் அந்நாட்டில் ஒளிபரப்புகளை நிறுத்தி வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Similar News