சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் கோர விபத்து.. 4 பேர் பலி- அதிர்ச்சி வீடியோ !!
சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் கோர விபத்து.. 4 பேர் பலி- அதிர்ச்சி வீடியோ !!
சுங்கச்சாவடி ஒன்றின் மீது ஆம்புலன்ஸ் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில், மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க முயன்றுள்ளது. இதற்காக அச்சாலையில் ஆம்புலன்ஸ் அதிவேகத்தில் வந்துள்ளது.
இதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இதனைச் செய்துள்ளனர்.
சாலையில் இருந்த மழை நீர் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனத்தின் டையருக்கும், சாலைக்குமான பிடிமானம் தளர்ந்துள்ளது. அதனால் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கியபடி சுங்கச்சாவடியில் இருந்த கேபின் ஒன்றில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பயணித்த நோயாளி, அவருடன் இருந்த இரண்டு அட்டண்டர் மற்றும் ஓட்டுநர் என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வீடியோவை மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Horrific accident of Ambulance at Shirur toll plaza near #Kundapur just now @dp_satish @prakash_TNIE @Lolita_TNIE @BoskyKhanna pic.twitter.com/b9HEknGVRx
— Dr Durgaprasad Hegde (@DpHegde) July 20, 2022
newstm.in