சுங்கசாவடி மீது வேகமாக வந்து மோதிய ஆம்புலன்ஸ் ... கோர விபத்து... 4 பேர் பலி!! அதிர்ச்சி வீடியோ..!!
சுங்கசாவடி மீது வேகமாக வந்து மோதிய ஆம்புலன்ஸ் ... கோர விபத்து... 4 பேர் பலி!! அதிர்ச்சி வீடியோ..!!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் டோல்கேட் இயங்கி வருகிறது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை பெய்த்து. இதனால் சாலை ஈரமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் ஒன்று டோல்கேட்டை வேகமாக கடக்க முயன்றுள்ளது.
அதை கவனித்த டோல்கேட் ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இதனைச் செய்துள்ளனர். மூன்று தடுப்பு கட்டைகளில் இரண்டு அகற்றப்பட்டுள்ளது. மற்றொன்றை டோல்கேட் ஊழியர் அகற்றிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வேளையில் தடுப்புகள் மீது மோதாமல் இருக்கவும், டோல்கேட்டில் மெதுவாக செல்லவும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகத்தை குறைக்க பிரேக் பிடித்தார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் பாய்ந்து வந்து டோல்கேட் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி, 2 உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் டோல்கேட் ஊழியர் ஒருவரும் உடல் நசுங்கி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஓட்டைநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Horrific accident of Ambulance at Shirur toll plaza near #Kundapur just now @dp_satish @prakash_TNIE @Lolita_TNIE @BoskyKhanna pic.twitter.com/b9HEknGVRx
— Dr Durgaprasad Hegde (@DpHegde) July 20, 2022
முதற்கட்ட விசாரணையில் ஒன்னாவரில் இருந்து உடுப்பி மாவட்டம் குந்தாபுராவுக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்துக்கு உள்ளானது தெரியவந்துள்ளது. இருப்பினும் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியவில்லை. ஆனாலும் ஆம்புலன்ஸில் பிரேக் செயலிழந்ததால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது டோல்கேட்டில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் வேகமாக வரும் ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தரையோடு தரையாக வேகமாக வந்து டோல்கேட் சுவற்றிலும், ஊழியர் மீதும் மோதுவது நெஞ்சை பதைபதைக்கும் வகையில் உள்ளது.