இன்று நடைபெற இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு..!!
இன்று நடைபெற இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு..!!
ஆம்பூரில் அரசு சார்பில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கனமைழ பெய்து வருகிறது.
கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன், காரணமாக பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மழையை காரணம் காட்டி ஆம்பூர் பிரியாணி திருவிழாவை ஒத்திவைக்கிறது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்.