7 ஆண்டுகளாக 17 வயது சிறுமியை டிஜிட்டல் ரேப் செய்த 81 வயது முதியவர்..!!

7 ஆண்டுகளாக 17 வயது சிறுமியை டிஜிட்டல் ரேப் செய்த 81 வயது முதியவர்..!!

Update: 2022-05-18 14:54 GMT

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் மௌரிஸ் ரைடர். ஓவியரான இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இவர் மீது டிஜிட்டல் ரேப் என்ற குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில், குற்றச் செயலைப் புரிந்த நபர் தனது ஆண் உறுப்பை அல்லாது, கை விரல்கள் மற்றும் கால் விரல்களை கொண்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவது டிஜிட்டல் ரேப் பாலியல் குற்ற பிரிவில் சேரும். 2012-ம் ஆண்டு நிர்பயா வழக்குக்குப் பின் தான் இந்த குற்றப்பிரிவு இந்தியாவில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 81 வயது நபர் மீது இபிகோ 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக புகார் அளித்த சிறுமி பெற்றோர் இல்லாத காரணத்தால் வேறொரு நபரால் வளர்க்கப்படுகிறார்.

சிறுமியை வளர்க்கும் நபரும் கைது செய்யபட்ட ஓவியரும் 20 ஆண்டு கால நண்பர்கள். அவரை வளர்த்து வந்த நபர் சிறுமியின் படிப்புக்காகவும் எதிர்காலத்திற்காகவும் 81 வயது ஓவியரின் அடைக்கலத்தில் விட்டுச் சென்றுள்ளார். தனது கட்டுப்பாட்டில் இருந்த சிறுமியை 7 ஆண்டுகளாக தொடர் பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார் மௌரிஸ் ரைடர்.

அச்சம் காரணமாக ஓவியரின் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளிக்க இச்சிறுமி தயங்கிவந்த நிலையில், இவரின் குற்றச் செயல்களை ஆதாரமாக பதிவு செய்து காவல்துறையிடம் சமர்பித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து 81 வயது ஓவியரை கைது செய்த போலீசார் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News