இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Update: 2022-05-09 15:40 GMT

சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு அருகிலேயே மாற்று இடம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது: “சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்கள்  மயிலாப்பூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் கட்டி வரும் வீடுகளில், மறு குடியேற்றம் செய்யப்படுவர்.

மாற்று இடம் வழங்குவது குறித்து வரும் காலங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மறு குடியமர்வு கொள்கை விரிவாக உருவாக்கப்படும்.

ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் ஆர்.ஏ.புரம் உயிரிழப்பே கடைசியாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Similar News