அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு!!

அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு!!

Update: 2022-03-27 10:23 GMT

பிற அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 370 உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில்  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிகமாக பேராசிரியர்கள் , அலுவலக ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  

இவர்கள் அரசு கல்லூரிகள் ,பல்கலைக் கழகங்கள், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மாற்றப்பட்டு பணி நிரவல் செய்து முடிக்கும் வரை எந்தப் பல்கலைக்கழகமும் புதிதாக எந்த வகையான நியமனங்களை மேற்கொள்ள கூடாது என கூறியிருந்தது.

அதன்படி முதற்கட்டமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 369 உதவி பேராசிரியர்கள் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  இதை தொடர்ந்து  545 பேராசிரியர்கள் மற்றும் 2,645 அலுவலர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து  அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து, அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களையும், தற்போது பணியாற்றிவரும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் பிற அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 370 உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டித்து  உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Similar News