இன்று காலை 10 மணிக்கு தரமான சம்பவம் - அண்ணாமலை அறிவிப்பு..!!

இன்று காலை 10 மணிக்கு தரமான சம்பவம் - அண்ணாமலை அறிவிப்பு..!!

Update: 2022-05-31 06:00 GMT

பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் 5 குறைக்கவேண்டுமென அண்ணாமலை வைத்த 72 மணி நேர கெடுவை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை.தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத திமுக அரசை கண்டித்து அறிவித்தபடி இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.திட்டமிட்டபடி இன்று காலை 10 மணிக்கு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் போராட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது   

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. ரூபாய் 100 கேஸ் மானியம் கொடுக்கவில்லை. இப்படி எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்திய அரசு இரண்டாவது முறையாக பெட்ரோல் டீசல் விலையை குறைத்து பிறகும் கூட மாநில அரசுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயை மக்களுக்காக விட்டுக்கொடுக்க திமுக அரசு தயாராக இல்லை.

மத்திய அரசு பெட்ரோல் விலை குறைந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பெட்ரோல் விலை குறைப்பிற்கான அறிவிப்பு வரவில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் பெட்ரோல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைகக்வில்லை. தேர்தல் நேரத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கண்டுகொள்ளாமல் மக்களை தவிக்க விட்டு திமுக அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும், டீசலுக்கு நான்கு ரூபாயும் குறைப்பதாக வாக்களித்துவிட்டு பெட்ரோலுக்கு மட்டும் ரூபாய் மூன்று குறைத்தனர்.

ஆகவே இரண்டாவது முறையாக மத்திய அரசு விலை குறைப்பு நடவடிக்கை எடுத்து இருப்பதால் திமுக அரசு முறையாவது மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்று மக்கள் சார்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த பிறகும் இன்னும் பாராமுகமாகவே திமுக அரசு நடந்துகொள்கிறது.  எனவே மக்கள் சக்தியைத் திரட்டி இன்று தலைமைச் செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி நடத்த இருக்கிறது. ஆகவே நம் பாரதிய ஜனதா கட்சியின் சொந்தங்கள் அனைவரும் இந்த பேரணியில் திரளாக கலந்துகொண்டு மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட அன்புடன் அழைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News