அண்ணாமலை எதிர் பேச்சு.. தலைவர் பதவியை பறிக்க திட்டமிடும் அமித் ஷா !!

அண்ணாமலை எதிர் பேச்சு.. தலைவர் பதவியை பறிக்க திட்டமிடும் அமித் ஷா !!

Update: 2022-04-12 19:15 GMT

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் மொழியாக இந்தி இருக்க வேண்டும், என தெரிவித்தார். 

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து இந்திய அளவில் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தி மொழி விவகாரம் தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாகி உள்ளது. ஏன், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று, சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் தமிழக பாஜக அனுமதிக்காது. இந்தியை கட்டாயம் திணிக்க மாட்டோம்; பாஜகவும் அதை செய்யாது. 

புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தி விருப்ப மொழியாகத் தான் உள்ளது. இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சொன்னது சரி தான். தமிழ் இணைப்பு மொழியாக இருப்பது பெருமை தான். மேலும், பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக உள்ளது. மத்திய அரசு குறைத்த பிறகும் தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ் மொழி பள்ளிகளை ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் படிக்க வேண்டும். இங்கு எத்தனை பேர் இந்தி பேசுவார்கள் என்று தெரியாது. நான் ஹிந்தி பேச மாட்டேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சண்டையை மூட்டி அதில் குளிர் காய நினைக்கிறார், என கூறினார்.

பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் இந்தி மொழி கருத்துக்கு எதிராக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்துத் தெரிவித்துள்ளது உட்கட்சியிலேயே பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து மூத்த நிர்வாகிகள் டெல்லி தலைமைக்கு இது குறித்து முறையிட வாய்ப்பு உள்ளதாகவும் கட்சியில் ஒருதரப்பினர் கூறுகின்றனர். 

இதனால் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இந்தி குறித்து கூறியவர் அமித் ஷா. 

newstm.in

Similar News