அண்ணாமலையாரே, அதே நடைமுறைதான்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!

அண்ணாமலையாரே, அதே நடைமுறைதான்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!

Update: 2022-06-02 17:25 GMT

“பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என்று, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது.

அரசுப் பணியாளர்களின் ஓய்வூதிய திட்டத்தின் வைப்புத் தொகை கடந்த மார்ச் மாதம் வரை 53,555 கோடி ரூபாயாக உள்ளது. இந்தத் தொகை எல்ஐசியின் பணத்திரட்சியுடன் கூடிய புதிய குழு ஓய்வூதிய திட்டத்திலும், மத்திய அரசின் கருவூலப் பட்டியல்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகையை தமிழக அரசு, முற்றிலும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்த நிதி வேறு பணிக்கோ, நோக்கத்திற்கோ இதுவரை பயன்படுத்தப்படவில்லை. இனியும் அதே நடைமுறைதான் தொடரும்” என்று, விளக்கம் அளித்துள்ளார்.

Similar News