ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000- வெளியாகும் அறிவிப்பு !!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000- வெளியாகும் அறிவிப்பு !!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது, திமுக ஆட்சி அமைந்து சுமார் 9 மாதங்கள் ஆன நிலையில் அந்த திட்டம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இதை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வந்தன. இதை அடுத்து, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், குடும்பத் தலைவிகளுக்கு எப்போது உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ளது. மேலும், கொங்கு மண்டலத்தையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது. இதனால் திமுக உடன்பிறப்புகள் மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் பரிசாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்காக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in