கேரளாவில் இருந்து களமிறங்கியுள்ள மற்றொரு நயன்தாரா!!
கேரளாவில் இருந்து களமிறங்கியுள்ள மற்றொரு நயன்தாரா!!
கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் படத்தில் கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்க உள்ளார்.
கே.டி.குஞ்சுமோன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்கிறார். முதல் பாகத்தில் இருந்த யாரும் 2ஆம் பாகத்தில் இல்லை. இவர் குசேலன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நயன்தாரா சக்ரவர்த்தி. குழந்தை நட்சத்திரமாக மோகன்லாலின் கிலுக்கம் கிலுகிலுக்கம் படத்தில் அறிமுகமானார். அதற்குப் பிறகு ஏராளமான மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இவர் சென்னை சில்க்ஸ், ஆர்எம்கேவி சில்க்ஸ் உள்பட பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஹீரோயினாக இவர் தமிழில் அறிமுகமாகும் படம் ஜென்டில்மேன் 2.
படத்தின் இயக்குனர், ஹீரோ ஆகியோரையும் இதே போல் கே.டி.குஞ்சுமோன் சர்ப்ரைஸாக அறிவிக்க இருக்கிறார். ஜென்டில்மேன் 2 படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். இவர்தான் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களின் இசையமைப்பாளர்.
newstm.in