பப்ஜியால் மீண்டும் ஒரு உயிர் பறிபோனது..!!

பப்ஜியால் மீண்டும் ஒரு உயிர் பறிபோனது..!!

Update: 2022-06-09 17:03 GMT

லக்னோவில் வசிக்கும் 16 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையானதால் அவரது தாய் கண்டித்துள்ளார். இருப்பினும் சிறுவன் தொடர்ந்து கேம் விளையாடிவந்துள்ளார்.

சம்பவத்தன்று, அவரது தாய் கேமை விளையாட விடாமல் தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டிலிருந்த தந்தையின் துப்பாக்கியை எடுத்து தாயைச் சுட்டு கொலை செய்துள்ளார். பிறகுத் தாயின் உடலை ஒரு அறையில் பூட்டிவைத்து, துர்நாற்றம் அடிக்காமல் இருக்க அறை முழுவதும் சென்ட் அடித்துள்ளார்.மேலும், வீட்டிலிருந்த தங்கையிடம் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி வந்துள்ளார்.

பின்னர் சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து துர்நாற்றம் வீசிய நிலையில் அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் வீட்டில் பூட்டி இருந்த அறையை திறந்துபார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலிஸார் சிறுவனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News