#BIG NEWS:- தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்கப் டெத்..!

#BIG NEWS:- தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்கப் டெத்..!

Update: 2022-04-28 14:04 GMT

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி, சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, விக்னேஷ் என்ற வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மறுநாள் காலை திடீரென விக்னேஷுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் சுரேஷ் இறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கன்னியை சேர்ந்த தங்கமணி என்பவர் லாக்கப்பில் உயிரிழந்துள்ளார்.

காவல்துறைக்கு அமைச்சராக உள்ள முதல்வர் ஸ்டாலின், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்; காவல் மரணங்களை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News