எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம், ஆனால்.. தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு..!
எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம், ஆனால்.. தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பு..!
சபரிமலையில், ஆன்லைன் முன்பதிவு தரிசனத்துக்கு இருந்த எண்ணிக்கை கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதையடுத்து, எவ்வளவு பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனத்துக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. தினமும் தரிசனத்துக்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாட்டை நீக்கும்படி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. எவ்வளவு பக்தர்கள் வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வர வசதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கட்டாயம் கொண்டு வரவேண்டும். மார்ச் 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.