விரைவில் விண்ணப்பியுங்கள்... இன்றே கடைசி நாள்!!
விரைவில் விண்ணப்பியுங்கள்... இன்றே கடைசி நாள்!!
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளின் விடுதியில் தங்கி பயில விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2022-2023ம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரும்பமுள்ள மாணவர்கள் விடுதியில் சேர( https://tnadw. hms.in ) என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். மேலும் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் பள்ளி விடுதியில் சேர இன்று புதன்கிழமை கடைசி நாளாகும். கல்லூரி விடுதியில் சேர அடுத்தமாதம் 5ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான்கு பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் சாதி சான்று, பள்ளி மாற்றுச் சான்று, பெற்றோரின் ஆண்டு வருமான சான்று, மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் மாணவர் பெயரில் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களை வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும் பள்ளிக்கும் இடைவெளி 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in