அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மூடப்படுகிறதா? - அமைச்சர் விளக்கம் !!
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மூடப்படுகிறதா? - அமைச்சர் விளக்கம் !!
தமிழக அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் இந்தாண்டு மூடப்படுவதாக வெளியான தகவலுக்கு பள்ளிக் கல்வி துறை அன்பில் மகேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை மூலம் எல்கேஜி, யூகேஜி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. எல்கேஜி, யூகேஜி நிர்வாகம் பள்ளிக் கல்வி துறையிடம் இருந்தாலும், அங்கன்வாடி மையங்களில்தான் இந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி தமிழகம் முழுவதும் 2,381 எல்கேஜி, யூகேஜி வகுப்பகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் எல்கேஜி, யூகேஜி மூடப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வி அதிகாரிகள், 2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்பட்டு வரும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது. காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூக நலத் துறை தொடர்ந்து எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை நடத்தும், என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்பவில்லை. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். பெற்றோர்கள் தங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் சேர்ந்துக் கொள்ளலாம், என்று அவர் தெரிவித்தார்.
இதனால் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் குறித்த குழப்பமான சூழலுக்கு விளக்கம் கிடைத்தது. எனினும் அரசு அறிவிப்பு தொடர்பாக முழு விளக்கம் வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.
newstm.in