நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் பண்ணுபவரா..?: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!
நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் பண்ணுபவரா..?: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!
ராமநாதபுரம் மாவட்டம், வெளி பட்டினத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி செல்வி (35). தனியார் பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஜூன் 19-ம் தேதி ஆன்லைனில் 799 ரூபாய்க்கு சேலை விற்பனை விளம்பரத்தை பார்த்து ஆர்டர் செய்தார். ஜூன் 25-ம் தேதி கூரியர் சேவை மூலம் சேலை வந்தது.
சேலை கிழிந்திருந்ததால், இணையதளம் சென்று அதில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து அந்த நபர் தெரிவித்த ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்த செல்வி, 2 வங்கிக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்தார்.
அதன்பின்னர் அந்த நபர், செல்வியின் வங்கிக் கணக்கிற்கு பணம் திரும்ப அனுப்பப்படும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
சிறிது நேரத்தில், செல்வியின் 2 வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி, மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.