இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

Update: 2022-07-02 04:15 GMT

சென்னையில் ஜூலை 2, சனிக்கிழமை மின்தடை பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 02.07.2022 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, அண்ணாநகர், மயிலாப்பூர், தாம்பரம், போரூர், ஐ.டி காரிடர், ஆவடி, அடையார், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அம்பத்தூர், பெரம்பூர், மாதாவரம், எண்ணூர், வியாசர்பாடி, கே.கே நகர் பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நாகை, திருக்குவளை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது  நாகை, நரிமணம் மற்றும் திருக்குவளை துணை மின் நிலையங்களிலும், திருமருகல், கீழ்வேளூா் துணை மின் நிலையங்களிலும் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், நாகை, நரிமணம், திருமருகல் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5.30 மணி வரையிலும், திருக்குவளை, கீழ்வேளூா் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும் மின்விநியோகம் இருக்காது.

தருமபுரி மாவட்டம்:

அரூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரூா் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 2) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கீரைப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

Similar News