அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் ராணுவ வீரர்கள் சில்மிஷம்!!
அருவியில் குளிக்க வந்த பெண்களிடம் ராணுவ வீரர்கள் சில்மிஷம்!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் மதுபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த மூன்று முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணுவ வீரர்களான திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், தேனியை பாலமுருகன், அருப்புக்கோட்டையை சேர்ந்த கந்தசாமி மற்றும் அவர்களது நண்பர்களான சரவணன், வடிவேலு உள்ளிட்ட 5 பேர் என மொத்தம் 8 பேர் கும்பக்கரை அருவியில் மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்குவந்த பெண்களிடம் தகாத முறையில் ஈடுபட்டு சில்மிஷம் செய்ததால் பெண்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகாரின் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட நபர்களை மடக்கி பிடித்தபோது போதை ஆசாமி ஒருவர் அவர்கள் வந்த காரில் வைத்திருந்த கத்தியை எடுத்து வனத்துறையினரை தாக்க முற்பட்டார்.
இதனையடுத்து அங்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும் சூழ்ந்துகொண்டு அவர்களிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவர்களை மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
காவல்துறையினர் வந்தபோது, மதுபோதையில் கீழே விழுந்து மண்டை உடைந்த போதை ஆசாமி ஒருவர் உட்பட அந்த 5 பேரும் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வரமறுத்து அங்கேயே இரண்டு மணி நேரமாக பயணிகளை தொந்தரவு செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டு போதை ஆசாமிகள் நால்வரையும் 108 வாகனத்தில் அழைத்துவந்ததுடன் காயமடைந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீதமுள்ள நான்கு பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in