தமிழகத்தில் விரைவில் 'கலைஞர் உணவகம்'.. அமைச்சர் டெல்லியில் உறுதி !!

தமிழகத்தில் விரைவில் 'கலைஞர் உணவகம்'.. அமைச்சர் டெல்லியில் உறுதி !!

Update: 2022-07-05 18:54 GMT

தமிழகத்தில் கடந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த உணவகம் பெரும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் அம்மா உணவகங்கள் ஒரு சில இடங்களில் மூடப்பட்டு வருவதாகவும் ஒரு சில இடங்களில் சரியாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார் 

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து இன்று டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.

பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.சக்கரபாணி, உணவுத்துறைக்கான ரூ.2,000 கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் 'கலைஞர் உணவகம்' திறக்கப்படும். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

Similar News