கஞ்சா போதையில் போலீஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆசாமி!!

கஞ்சா போதையில் போலீஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆசாமி!!

Update: 2022-07-19 10:21 GMT

திருச்சி அருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோல்கேட் ஒய் ரோடு அருகே கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர் கத்தியை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கஞ்சா போதையில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த போதை ஆசாமி, தாம் ஒரு அரசியல் பிரமுகர் மனைவியின் கார் டிரைவர் என சொல்லி, போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இருப்பினும் போலீசார் அந்த போதை ஆசாமியிடம் கனிவுடன் பேசி அமைதிப்படுத்த முயன்றனர்.

அந்த நபர் ஆக்ரோஷமாக பேசிவிட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட சென்றார். அப்போது போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். ஆத்திரமடைந்த போதை ஆசாமி போலீசாரை சரமாரியாக தாக்கி அவர்கள் அணிந்திருந்த சட்டையை கிழித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர். அவர்களிடம் இருந்து போதை ஆசாமியை மீட்ட போலீசார் ஒரு வழியாக அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் போதை ஆசாமி தாக்கியதில் பணியில் இருந்த போலீசார் ஒருவர் காயமடைந்தார்.

newstm.in

Similar News