சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்… மாஸ் காட்டிய அஷ்வின்!!

சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான்… மாஸ் காட்டிய அஷ்வின்!!

Update: 2022-05-21 08:00 GMT

சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெவோன் கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார்.

16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெவோன் கான்வே ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை அசரடித்தார். மொயின் அலி டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் அரைசதம் கடந்து அசத்தினார்.

மறுமுனையில் ராயுடு, ஜெகதீசன் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். பின்னர், கேப்டன் தோனி - மொயின் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 19-வது ஓவரில் தோனி 26 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பட்லர் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் அவுட் ஆனார். பின்பு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வால் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

ஜெய்ஸ்வால் 59 ரன்களும், அஸ்வின் 40 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். 6-வது விக்கெட்டுக்கு இணைந்த அஸ்வின் ரியான் பராக் ஜோடி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ராஜஸ்தான் அணிளை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.

இதனால் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 151 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

newstm.in

Similar News