தமிழக காங்கிரசாரே கேட்டுக்கோங்க.. மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் ராஜீவ் காந்தி..!

தமிழக காங்கிரசாரே கேட்டுக்கோங்க.. மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் ராஜீவ் காந்தி..!

Update: 2022-05-21 11:41 GMT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை தமிழக காங்கிரசார் எதிர்க்கும் நிலையில், “எனக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர் என் தந்தை” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் இன்று (மே 21-ம் தேதி) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில், தனது தந்தை மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர் என்று, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.

அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. எங்களுக்கு மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தவர்.

நாங்கள் அவரை மிகவும் இழக்கிறோம். நாங்கள் ஒன்றாக கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Similar News