அசாம் வெள்ளம் : உதவி செய்யாமல் ஆட்சிக் கவிழ்ப்பில் பிரதமர் பிஸி!!
அசாம் வெள்ளம் : உதவி செய்யாமல் ஆட்சிக் கவிழ்ப்பில் பிரதமர் பிஸி!!
பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு சென்று பாதிப்புகளை பார்வையிட்டு உதவிகளை அறிவிக்காமல், ஆட்சிக் கவிழ்ப்பில் முனைப்பு காட்டுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். அசாமில் 32 மாவட்டங்களில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட வேண்டும், அந்த மாநிலத்துக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் பிரதமர் வெள்ள பாதிப்புகளை பார்வையிடாமல் மகாராஷ்டிராவில் அரசை கவிழ்ப்பதில் தீவிரமாக உள்ளார் என காங்கிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாமுக்கு சிறப்பு நிதியை அறிவிக்க வேண்டும். ஆனால் மகாராஷ்டிரா அரசை கவிழ்ப்பதில், குஜராத் தேர்தலில்பிரதமர் மும்முரமாக இருக்கிறார், பா.ஜ.க.வுக்கு அதிகாரம் மட்டுமே எல்லாம் என்று விமர்சித்துள்ளார்.
newstm.in