கணவர் மீது தாக்குதல்.. பெண் காவல் ஆய்வாளர் மீது வழக்கு

கணவர் மீது தாக்குதல்.. பெண் காவல் ஆய்வாளர் மீது வழக்கு

Update: 2022-06-29 10:52 GMT

கோவையில் கணவரை தாக்கியதாக பெண் காவல் ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி குடியிருப்பில் சரவணன் (56) வீரம்மாள்  (46) தம்பதி வசித்து வருகின்றனர். இதில், சரவணன் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி வீரம்மாள் (46), நீலகிரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

இந்த தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனினும் அவர்களை மகள்கள் சமாதானம் செய்துவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் மாறிமாறி கைகளாலும், கட்டையாலும் தாக்கிக் கொண்டனர். 


இருவரின் மோதல் சம்பவம் கேட்டு அங்கு சென்ற அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இவ்விவகாரம் தொடர்பாக இருவரும் தனித்தனியாக காவல்துறையில் புகார் அளித்தனர். ‘தாக்குதல், தகாத வார்த்தைகளில் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் இருவர் மீதும் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


newstm.in

Similar News